வெளிநாட்டு விண்ணப்பப் பத்திரங்கள் |
வெளிநாட்டுத் தூதரகக் கிளை வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள் இலங்கைப் பிரசாவுரிமையை கொண்டுள்ள ஒருவர் வெளிநாடொன்றில் இருக்கும் போது புதிய கடவுச்சீட்டொன்றினைப் பெறவோ / கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக்கொள்ளவோ அந்நாட்டின் தூதகரத்தினூடாக அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் இலங்கைத் தூதரகமொன்று இல்லாவிடின் மிகவும் அருகில் உள்ள நாட்டில் அமைந்துல்ல இலங்கைத் தூதரகத்தினூடாகவேனும் விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்தின் வெளிநாட்டுத் தூதரக கிளையினால் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்
1. இலங்கை வெளிநாட்டுத் தூதரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: (அ) மிகச் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை (படிவம் K 35 A), மற்றைய அத்தாட்சிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன் இலங்கை வெளி நாட்டுத் தூதரகத்தில்/ கொன்சியுலர் காரியாலயத்தில் ஒப்படைத்தல் வேண்டும். (ஆ) விண்ணப்பதாரியின் பிரகடனம் உள்ளடக்கப்பட்டு கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் (படிவம் K 35 A) திருத்தப்பட்டிருப்பதுடன், இவ் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, விண்ணப்பதாரி கையொப்பமிட்டு தூதரக உத்தியோகத்தரிடம் ஒப்படைத்தல் வேண்டும். விண்ணப்பதாரியின் பிரகடனம் அடங்கிய பகுதியில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இன்றி எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (இ) கடைப்பிடிக்க வேண்டிய/ கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களைத் தெளிவூட்டும் விசேட அறிவுறுத்தல் குறிப்பை, கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை விநியோகிக்கும் போதே ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் விநியோகித்தல் வேண்டும். (ஈ) அச்சிடப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவங்களை (படிவம் K 35 A), அந்தந்த வெளிநாட்டுத் தூதரகங்கள்/ கொன்சியுலர் காரியாலயங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், இத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தொடரறா முறை மூலமாகவும் இவ் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2. 2018.01.01 ஆம் திகதி தொடக்கம், வெளிநாட்டுத் தூதரங்களூடாக விண்ணப்பித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள், விமான நிலையங்களூடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: (அ) பயணிகள் குடிவரவு கருமபீடத்திற்கு அறிவிப்புச் செய்தல் வேண்டும். அல்லது பிரதான குடிவரவு உத்தியோகத்தரிடம் அவர்கள் நேரடியாக அறிவிப்புச் செய்தல் வேண்டும். (ஆ) இதன் போது தனியான குறிப்பிலக்கமொன்றுடன் கூடியதாக, உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவமொன்று (BDA Form) இரண்டு பிரதிகளைக் கொண்டதாக பயணிகளுக்கு விநியோகிக்கப்படும். (இ) விமானப் பயணிகள், உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவத்தில் (BDA Form) இரு பிரதிகளைக் கொண்டதாக கையொப்பமிடுதல் வேண்டும். (ஈ) அவற்றுள் ஒன்று, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக அந் நபருக்கு விநியோகிக்கப்படும். (உ) மற்றைய பிரதி விமான நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.
விமான நிலையத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் காணப்படுவதில்லை என்பதால், அவர்கள் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தருதல் வேண்டும். உயிர்மானத் தரவுகளைப் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொடுப்பதற்காக திகதியொன்றையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளலாம். இங்கே கிளிக் செய்யவும் 3. இலங்கைக்குள் பிரவேசித்ததன் பின்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: 2018 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு, இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தொடர்பில், இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக இலங்கைக் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பித்து, தமக்குரிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதன் பின், அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் முதற் சந்தர்ப்பத்திலேயே அவர்களது உயிர்மானத் தரவுகள் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொள்ளப்படும். (அ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது மாத்தறை, கண்டி, வவுனியா, குருணாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தருதல் வேண்டும். (ஆ) இவ் அலுவலகங்ளில் வெளிநாட்டுத் தூதரகக் கிளையில் நிறுவப்பட்டுள்ள விசேட கருமபீடத்தில் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளப்படும். (இ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்ததன் பின் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை பூர்த்தியடைந்ததை அத்தாட்சிப்படுத்தும் வகையில் தன்னியக்கமாக பிறப்பிக்கப்படுகின்ற (System generated) பற்றுச்சீட்டொன்று திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும். (ஈ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மேற்கொண்டு முடிப்பதற்காக செலவாகும் காலம் சுமார் 30 - 45 நிமிடங்களாகும். (உ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்த நபர்களுக்கு எந் நேரத்திலும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை இற்றைப்படுத்தப்படும். (ஊ) மேற்சொன்ன பற்றுச்சீட்டை, இலங்கையிலிருந்து புறப்படும் வரை பாதுகாப்பாக தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். கடவுச்சீட்டு விண்ணப்ப படிவம் K 35 A ஐ தரவிறக்க விசாரணைகள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் - திருமதி கே.ஜீ.ஆர். பிரியதர்ஷனீ தொலைபேசி : +94 11 5329230 நீடிப்பு : 9230 பக்ஸ் : +94 11 2879213 மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it வெளிநாட்டுத் தூதரகப் பிரிவுக் கிளையினூடாக விண்ணப்பிக்கும் விதம்: அவசியமான ஆவணங்கள்: கடவுச்சீட்டு விநியோகத்தைப் பார்க்கவும். விண்ணப்பப் பத்திரங்களுடன் தொடர்புடைய கட்டணங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்வரும் சுற்றறிக்கைகளைப் பார்க்கவும், உதவிச் சேவைகள்
அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியொன்றை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதெப்படி? குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன. இச்சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான ஆவணங்கள் யாவை? மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான பிரதிகளும் இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை? பிரதி ஒன்றுக்கு இலங்கை ரூபா 300/- (அத்தாட்சிப்படுத்தக்கூடிய உச்சப் பிரதிகளின் எண்ணிக்கை 3)
மொழிபெயர்ப்புச் சேவை கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அராபிய மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையூடாக வழங்கப்படும். எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது? விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகைதரல் வேண்டும். இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணம் யாது? ஒரு கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புக்காக இலங்கை ரூபா 1,200/- அறவிடப்படும். |
Information with regard to applying for ETA
Suspension of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak Country wise Details
Head Office and all our regional offices are open from 09/11/2020 for public services. You must make an appointment.
Appointments are open now......
Extension of Sri Lankan Visa
New Procedure for Visa Exempted Countries
New... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions
INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS
IMPORTANT NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS
Instructions to Registered Photo Studio Owners when sending photos online
* Presidential Secretariat of Sri Lanka
* President's Media Division News
* வெளிவிவகார அமைச்சு
* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்
* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்