www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் வீசா சேவைகள் வருகைதரலுக்கான வீசா
வருகைதரலுக்கான வீசா அனுமதிப் பத்திரங்கள்

சுற்றுலாவுக்கான வருகைதரல் வீசா

தயவுசெய்து   http://www.eta.gov.lk எனும் இணையத் தளத்திற்கு செல்லவும்

எனது சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதெப்படி?
குடிவரவு அலுவலர்களால் நாட்டுக்குள் பிரவேசிக்கும் விமான நிலையத்தில் வழங்கப்படுகின்ற நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான  அனுமதிப் பத்திரங்கள் குறிப்பிட்டுள்ள கால எல்லைக்குள் இலங்கைக்குள் பிரவேசிக்கின்ற நல்லெண்ணம் கொண்ட உல்லாசப் பிரயாணி ஒவ்வொருவரும் அவ்வனுமதிப் பத்திரம் தீர்வதற்கு முன்னராக வீசாவை நீடித்துக் கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம். தொடக்கத்தில் வழங்கிய 30 நாட்கள் காலப் பகுதியை நீடித்துக்கொள்ள அவசியமெனில் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தினால் இரண்டு (02) மாத கால நீடிப்பினை வழங்க முடியும். எவ்வாறாயினும் மேலும் நீடிப்பு தொடர்பாக நியாயமான காரணங்களின் பேரில் மாத்திரமே பரிசீலித்துப் பார்க்கலாம். இந்த மட்டுப்பாடு முன்னாள் இலங்கையர்களுக்கு ஏற்புடையதன்று.

வீசாவை நீடித்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

குறுகியகால வீசாவைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் பெற்று (ETA – Electronic Travel Authorization) நாட்டிற்குள் பிரவேசித்தல் வேண்டும். இந்த இலத்திரனியல் பயண அங்கீகாரம் கிடைக்கப் பெறும் வரை எந்தவொரு வெளிநாட்டவரும் இலங்கைக்குள் பிரவேசித்தல் கூடாது.

சுற்றுலா வீசா

 

  1. திரும்பிச் செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு.
  2. இலங்கையில் தங்கியிருக்கும் இடத்தின் முகவரியும், தொலைபேசி இலக்கமும் (ஹோட்டல் வவுச்சர் மற்றும் கட்டணப் பட்டியல்கள்)
  3. விண்ணப்பதாரியின் புகைப்படம் சகிதம் வீசா விண்ணப்பம்.
* இந்த வகை வீசாவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நபர் கட்டாயமாக சமுகமளித்தல் வேண்டும்.
வியாபார வீசா
  1. விண்ணப்பதாரியின் புகைப்படம் சகிதம் வீசா விண்ணப்பம்.
  2. வீசாவை நீடிக்குமாறு கேட்டுக் கொள்ளும் வியாபார நிறுவனத்தினால் சமர்ப்பிக்கும் கடிதம்.
* இந்த வகை வீசாவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நபர் அல்லது வியாபார நிறுவனத்தின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் சமுகமளித்தல் வேண்டும்.

 


சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை நான் எவ்வாறு எங்கிருந்து பெற்றுக்கொள்ள முடியும்?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. அச்சிடக்கூடிய விண்ணப்பப் பத்திரங்களை இங்கே பதிவிறக்கம் செய்க.

எனது சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை ?
இலங்கையில் நீங்கள் தங்கி இருக்கக் கருதுகின்ற காலப் பகுதி உங்களின் பயண ஆவணங்களின் திகதி காலவதியாக குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் முடிவுற வேண்டும்.

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Regional Office, Kurunegala shifted to a new building

The Regional Office, Kurunegala of this Department has been shifted to a new building at, No. 95, Negombo Road, Kurunegala from 05thOctober 2020.

 


Location