அறிவித்தல் - V |
![]() |
![]() |
![]() |
இலங்கையில் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல் இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் 2020.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக. கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் நாட்டில் பரவும் அபாயம் காரணமாக, தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்து தரித்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட எல்லா வகையான வீசாக்களினதும் செல்லுபடிக் காலம் 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி அல்லது முன்னர் திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து, உரிய வீசா கட்டணத்தைச் செலுத்தி, தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், உலகின் அநேகமான நாடுகளில் விமான நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதன் காரணமாக, தற்சமயம் இலங்கையில் தரித்திருக்கும் அநேகமான வெளிநாட்டவர்களுக்கு இது வரை இந் நாட்டிலிருந்து வெளியேற முடியாதிருக்கும் அதே வேளை, இவ் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 2020 யூன் 11 ஆம் திகதிக்கு முன்னர் மேற்சொன்னவாறு திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொள்வதற்கு பெரும்பாலானோருக்கு சந்தர்ப்பம் கிட்டியில்லை என்பது திணைக்களத்தினால் அவதானிக்கப்பட்டது. இந் நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு, தற்சமயம் இலங்கையில் தரித்திருக்கும் எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்களது வீசா அனுமதிப் பத்திரங்களை சீராக்கிக் கொள்ளும் பொருட்டு, 2020 யூன் 11 ஆம் திகதி தொடக்கம் 2020 யூலை 11 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் விதத்தில் எல்லா வகையான வீசா அனுமதிப் பத்திரங்களினதும் செல்லுபடிக் காலத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம். எனவே, கீழ்க் காட்டப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
|
Information with regard to applying for ETA
Suspension of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak Country wise Details
Head Office and all our regional offices are open from 09/11/2020 for public services. You must make an appointment.
Appointments are open now......
Extension of Sri Lankan Visa
New Procedure for Visa Exempted Countries
New... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions
INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS
IMPORTANT NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS
Instructions to Registered Photo Studio Owners when sending photos online
* Presidential Secretariat of Sri Lanka
* President's Media Division News
* வெளிவிவகார அமைச்சு
* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்
* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்