அறிவித்தல் - V Print

இலங்கையில் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல்

இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப் பத்திரங்களை நீடித்தல் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் 2020.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக.

கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் நாட்டில் பரவும் அபாயம் காரணமாக, தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்து தரித்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட எல்லா வகையான வீசாக்களினதும் செல்லுபடிக் காலம் 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், 2020 யூன் மாதம் 11 ஆம் திகதி அல்லது முன்னர் திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து, உரிய வீசா கட்டணத்தைச் செலுத்தி, தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், உலகின் அநேகமான நாடுகளில் விமான நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதன் காரணமாக, தற்சமயம் இலங்கையில் தரித்திருக்கும் அநேகமான வெளிநாட்டவர்களுக்கு இது வரை இந் நாட்டிலிருந்து வெளியேற முடியாதிருக்கும் அதே வேளை, இவ் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 2020 யூன் 11 ஆம் திகதிக்கு முன்னர் மேற்சொன்னவாறு திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொள்வதற்கு பெரும்பாலானோருக்கு சந்தர்ப்பம் கிட்டியில்லை என்பது திணைக்களத்தினால் அவதானிக்கப்பட்டது.

இந் நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு, தற்சமயம் இலங்கையில் தரித்திருக்கும் எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்களது வீசா அனுமதிப் பத்திரங்களை சீராக்கிக் கொள்ளும் பொருட்டு, 2020 யூன் 11 ஆம் திகதி தொடக்கம் 2020 யூலை 11 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் விதத்தில் எல்லா வகையான வீசா அனுமதிப் பத்திரங்களினதும் செல்லுபடிக் காலத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தயவுடன் அறியத் தருகின்றோம்.

எனவே, கீழ்க் காட்டப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 1. எல்லா வீசா விண்ணப்பதாரிகளும் 2020 யூலை மாதம் 11 ஆம் திகதி அல்லது முன்னர் கீழ்க் காணும் இணையத்தள நீடிப்பு ஊடாக திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, உரிய வீசா கட்டணத்தைச் செலுத்தி, தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக் கொள்ளுமாறு இத்தால் அறியத் தருகின்றோம். 2020 மார்ச் 07 ஆம் திகதிக்கும் 2020 யூலை 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் எல்லா வீசாக்களும் தண்டப் பணம் அறவிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது

  https://eservices.immigration.gov.lk/vs

 2. உரியவாறு திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு வருகை தருவோருக்கு மட்டும் திணைக்கள வளாகத்தினுன் பிரவேசிப்பதற்கு அனுமதியுண்டு. நாளொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவை வழங்கப்படுவதால், ஒதுக்கிக் கொள்ளப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பதாக விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டும் என்பதையும் தயவுடன் கவனத்திற் கொள்ளவும்.

 3. இது தொடர்பில் உங்களுக்கு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு கீழ்க் காணும் முறைகள் ஊடாக எமது உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்ளலாம்

  மின்னஞ்சல்:

  குறுகிய கால வீசா (Visit Visa)
  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

  வதிவிட வீசா (Residence Visa)
  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

  தொலைபேசி இல.: 070-7101050 (மு.ப. 9.00 மணிக்கும் பி.ப. 4.00 மணிக்கும் இடையில் தொடர்பு கொள்ளவும்)

 4. தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாக, நீங்கள் ஒதுக்கிக் கொண்ட திகதியில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தும் பட்சத்தில், திணைக்களத்திற்கு வருகை தருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தயவுடன் அறியத் தருகின்றோம். இதற்குப் பதிலாக ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்ட “திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்ட அறிவித்தலை” மேற்சொன்ன மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும். தொடர்ந்து உங்களுக்கு புதிய திகதியொன்றும் நேரமும் மிக விரைவில் பெற்றுத் தரப்படும்.

 5. இக் காலப்பகுதியிடையே நீங்கள் தீவிலிருந்து வெளியேறுவதற்கு கருதுவீர்களானால், மேற்சொன்ன வீசா நீடிப்புடன் தொடர்புடைய வீசா கட்டணங்களை விமான நிலையத்தில் வைத்து செலுத்தி தீவிலிருந்து வெளியேறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

  குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் பணிப்புரைகளுக்கு அமைய இவ் அறிவித்தல் வெளியிடப்படுகின்றது.