www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் வீசா சேவைகள் வதியும் வீசா
வதிவிட வீசா
வதிவிட வீசா என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையரல்லாத ஒருவருக்கு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும். முதலீடு அல்லது வேறு கருமங்களுக்காக வதிவிட வசதிகளை வழங்கத் தீர்மானித்துள்ள இலங்கையரல்லாத வெளிநாட்டவர்களுக்கு இது விநியோகிக்கப்படும். அதனைப் பெறுபவர்கள் இலங்கையில் தங்கி இருத்தல் மற்றும் அவர்களின் தொழில்சார் பணிகள் மேற்கொள்ளப்படல் இந்நாட்டு மக்களின் நலனுக்கு பங்கமேற்படுத்தமாட்டாதென உரிய அலுவலர் திருப்தியுறும் வேளைகளிலேயே இவ்வீசா விநியோகிக்கப்படும்.

முக்கியம்
வதிவிட வீசா பெறும் பொருட்டு வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றில் குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் இணக்கத்துடன் விநியோகிக்கப்படுகின்ற நுழைவு வீசா அனுமதிப் பத்திரத்துடன் இலங்கைக்கு வரவேண்டியது அவசியமாகும். இலங்கையில் வதிவதற்காக வீசா அனுமதி கோரக் கருதுவதாக நாட்டுக்குள் நுழைவதற்கான வீசா அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வேளையில் நீங்கள் குறிப்பிட வேண்டுமென்பதோடு, அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் வேண்டும்.

கட்டுப்பாட்டாளரது அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டுள்ள நுழைவு வீசாவினை வதிவிட வீசாவாக மாற்றும் பொருட்டு பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.

1. தொழில் வகையினம்

A. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு அவசியமான கருத்திட்ட தொழில்வாண்மையாளர்கள், இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் நிலவுகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்கள்.

விண்ணப்பப் பத்திர மாதிரியொன்றை எங்கிருந்து பெறலாம் ?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து
  2. மாதிரிப் படிவத்தின் அச்சிடக்கூடிய வடிவத்திலான பிரதியொன்றை இங்கே பதிவிறக்கம் செய்க.

உங்களின் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதி
விட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
முதலீட்டுச் சபை

  • முதலீட்டுச் சபையின் சான்றிதழ்
  • பிரதிநிதித்துவம் செய்யும் கம்பெனியின் கோரிக்கைக் கடிதம்
  • முதலீட்டுச் சபையின் உடன்படிக்கை
  • கம்பனிப் பதிவுச் சான்றிதழ்

கருத்திட்டம்

  • கருத்திட்ட அலுவலக கோரிக்கை.
  • வரிசை அமைச்சின் விதப்புரை அல்லது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் விதப்புரை.
  • கருத்திட்டத்தின் உடன்படிக்கை.

எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை ?
வீசா கட்டணம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.

எனது வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு ?
உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

எனது வதி
விட வீசா அனுமதி பத்திரத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது?
காலத்தை நீடித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரங்கள் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

வதிவிட வீசா புதுப்பித்தல் விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்ப பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.

எனது வதிவிட வீசாவினைப் புதுப்பித்தல் தொடர்பான ஏனைய நிபந்தனைகள் யாவை ?
நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் உங்கள் பிரயாண ஆவணங்களின் திகதி காலாவதியாக குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிறைவடைய வேண்டும்.

B. வங்கிக் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும்

வதி
விட விசா அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான விண்ணப்பப் பத்திர மாதிரிப் படிவமொன்றை எங்கிருந்து பெறலாம்?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்க.

எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
நீங்கள் உங்கள் விசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு, குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
வங்கியின் கோரிக்கை
இலங்கை மத்திய வங்கியின் விதப்புரை

எனது வதி
விட வீசா அனுமதிப் பத்திரத்துடன் தொடர்பான கட்டணம் யாது?
வீசா கட்டணங்கள் தொடர்பான தகவல்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இங்கே சுடக்குக.

உங்கள் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
உங்கள் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

நீங்கள் உங்களின் வதி
விட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம்?
கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.

வதி
விட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் பத்திர மாதிரி எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பத்தின் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.

உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தல் தொடர்பான பிற நிபந்தனைகள் யாவை ?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்க கருதும் காலம் முடிவடைதல் வேண்டும்.

C. அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்துள்ள தொண்டர்கள் / ஆட்கள்


வதி
விட வீசா விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெறலாம்?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.

எனது வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பது எப்படி?
உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்காக

  • அமைப்பின் கோரிக்கை
  • தேசிய பாதுகாப்பு அமைச்சு மூலமாக அனுப்பிவைக்கப்பட வேண்டிய அரச சார்பற்ற அமைப்புச் செயலகத்தின் விதப்புரை.
  • தேசிய பாதுகாப்பு அமைச்சினால் விநியோகிக்கப்படுகின்ற வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம்.
  • இலங்கைக்கும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கும் இடையிலான உடன்படிக்கை அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பின் அதன் பிரதி.

தொண்டர்களுக்காக

  • அமைப்பின் கோரிக்கை
  • வரிசை அமைச்சின் விதப்புரை
  • இலங்கைக்கும் அந்நாட்டுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பின் அதன் பிரதி.

எனது வதிவிட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை ?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக தயவுசெய்து இங்கே சுடக்குக.

எனது வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு ?

உங்களின் வதிவிட வீசா ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

எனது வதி
விட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம் ?
நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.

கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.

வதிவிட வீசா புதுப்பித்தலில் தாக்கமேற்படுத்தும் ஏனைய நிபந்தனைகள் யாவை ?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

D. இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள கருத்திட்டத்தில், நிறுவனத்தில் அல்லது அமைப்பாண்மையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்கள்

இந்த வதிவிட வீசா விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமாப்பிக்கலாம் ?
நீங்கள் உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
  • நிறுவனத்தின் கோரிக்கை
  • வெளிநாட்டலுவல்கள் அமைச்சினதோ சம்பந்தப்பட்ட வரிசை அமைச்சினதோ விதப்புரை
  • இலங்கைக்கும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கும் இடையிலான உடன்படிக்கை அல்லது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பின் அவ்வுடன்படிக்கையின் பிரதி.

எனது வதி
விட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணம் எவ்வளவு ?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிய இங்கே சுடக்கவும்.

எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
உங்களின் வதிவிட வீசா இரண்டு (02) வருடத்திற்கு செல்லுபடியாகும்.
அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.


எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை நான் எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்?
கால நீடிப்புக்கான விண்ணப்பத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவும்.

வதி
விட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்கும் விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
நீங்கள் உங்கள் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

E. தனியார் கம்பெனியொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்

நான் வதி
விட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
நீங்கள் உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தைக் கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதி
விட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
  • மாதிரிப் படிவம் 48
  • மாதிரிப் படிவம் 65
  • கம்பனியின் கோரிக்கை
  • கம்பனி கூட்டிணைவுக் கடிதமும் அமைப்பக விதிகளும்
  • வரிசை அமைச்சின் விதப்புரை
எனது வதிவிட வீசாவுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை ?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிய இங்கே சுடக்குக.

எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு ?
வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும்.
அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.


எனது வதிவிட
வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம்?
கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை ?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

2. முதலீட்டாளர் வகையினம்


A. இலங்கையில் நிதி முதலீட்டினை செய்ய விரும்புவோர்
வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் ?
நீங்கள் உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தைக் கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
  • மாதிரிப் படிவம் 48
  • மாதிரிப் படிவம் 65
  • கம்பனி கூட்டிணைவுக் கடிதமும் அமைப்பக விதிகளும்
  • வரிசை அமைச்சினதும் முதலீட்டுச் சபையினதும் (BOI) விதப்புரைகள்
  • முதலீட்டுச் சபை உடன்படிக்கை
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை ?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.

வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
அதனை வருடந்தோறும் புதுப்பிக்கலாம்.


எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம் ?
கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் ?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
உங்கள் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரம் தொடர்பில் தாக்கமேற்படுத்துகின்ற ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைய வேண்டும்.

3. சமயம் சார் வகையினம்
  • மதகுருமார்கள் (துறவிகள்)
நான் வதிவிட வீசா அனுமதிக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை சமர்ப்பிப்பது எவ்வாறு?
உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.
எனது வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
மத குருமார்கள்
மத அமைப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதம்.
வரிசை அமைச்சின் விதப்புரை.

4. மாணவர் வகையினம்
  • பல்கலைக்கழக மாணவர்கள்
  • அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்
  • சமயத்துறை சார்ந்த மாணவர்கள்
வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  • விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
உங்களின் வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
பல்கலைக்கழக மாணவர்களுக்காக
  • உயர் கல்வி அமைச்சின் விதப்புரை.
  • பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம்.
பிற மாணவர்கள் மற்றும் 16 வயதுக்கு குறைந்த மாணவர்களின் பாதுகாவலர்கள்
  • கல்வி நிறுவனத்தின் கடிதம்.
  • சம்பந்தப்பட்ட தூதரகத்தின் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கடிதம்
  • பாதுகாவலர்கள் தொடர்பில் ஒரு வருடத்திற்கு 1500 அமெரிக்க டொலர் பெறுமதியான காசாக்கத் தக்க பற்றுச்சீட்டுகள்
  • கல்வி நிறுவனத்திடமிருந்து கோரிக்கைக் கடிதம்
  • சம்பந்தப்பட்ட தூதரகத்தின் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமிருந்து மதத்துறை சார்ந்த மாணவர்களுக்காக பெறப்பட்ட கடிதம்
  • மத அமைப்பின் கோரிக்கைக் கடிதம்
  • வரிசை அமைச்சின் விதப்புரை
வதிவிட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக.

எனது வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
உங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.


நான் எனது சாதாரண வதி
விட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம்?
கால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெறலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

5. 1954 உடன்படிக்கையில் அடங்குகின்ற பதிவு செய்த இந்தியர்கள்.
நான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெறுவது?
  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  • விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதி
விட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
  • கோரிக்கைக் கடிதம்
  • பதிவுச் சான்றிதழ்
  • விவாகச் சான்றிதழ்
  • 16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்துடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.

எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பது எப்படி?
கால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

வதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும்
வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  • விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

எனது வதி
விட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
பிறப்புச் சான்றிதழ்
பிரசாவுரிமைச் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழான பிறப்புப் பதிவு
பதிவு செய்தல் மூலமாக பிரசாவுரிமை பெற்றிருப்பின் பிரசாவுரிமைச் சான்றிதழ்
விவாகச் சான்றிதழ்
தங்கி வாழ்வோரின் விவாகச் சான்றிதழ்

எனது வதி
விட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக.

எனது வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
உங்கள் வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும்.
அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.


எனது வதி
விட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்?
கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வதி
விட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

7. இலங்கையரொருவரது குடும்ப அங்கத்தவர்கள்

வாழ்க்கைத்துணைக்கு விசா வழங்கும் நடைமுறை
வாழ்க்கைத்துணை வீசா வகை
வீசா காலம்
வீசா கட்டணம்
விசேட குறிப்புகள்
1
  1. விண்ணப்பிக்கும்  போது திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கடந்துள்ள இலங்கைப் பிரஜையின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணை ; மற்றும்
  2. மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணையின் ஒவ்வொரு குழந்தையும்.

ஆரம்பமாக வழங்குதல்

 

01 வருடம்
இலவசம் * 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கிவாழும் குழந்தைகளுக்கு 22 வயது வரை வீசா கட்டணம் ஏற்புடையது.
நீட்டிப்புகள்
* ஒரு தடவையில் 02 வருடங்கள், வாழ்க்கைத் துணையின் 05 வருட வீசா  காலம் முடியும் வரை
* ஒரு தடவையில் 05 வருடங்கள், வாழ்க்கைத் துணையின் 05 வருட வீசா முடிவடைந்த பிறகு
இலவசம்
2 மறுமணம் செய்து கொள்ளாத, இறந்த இலங்கையர் ஒருவரின் இலங்கை அல்லாத வாழ்க்கைத்துணைக்கு.
(வேலைவாய்ப்புக்கான  அனுமதியுடன்)
01 வருடம்
வருடமொன்றுக்கு USD 100
* வீசா காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து அமையும்
3 பத்து வருடங்களுக்கு குறையாமல் தொடர்ச்சியாக இலங்கையில் வாழும் இலங்கைப் பிரஜையின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணைக்கு. (வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்)
01 வருடம்
வருடமொன்றுக்கு USD 100
* வீசா காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து அமையும்
4 பதினெட்டு வயதுக்கு குறைந்த பிள்ளைகளுடன் தனியாக வாழும் இலங்கைப் பிரஜையின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணைக்கு.
(வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்)
01 வருடம்
வருடமொன்றுக்கு USD 100
* வீசா காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து அமையும்
விசேட குறிப்புகள்:

A. விசா வழங்கும் காலம் கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலத்தைப் பொறுத்தது.
B. வீசா வழங்குவதற்கான தற்துணிவு அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
C. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு தடைநீக்க அறிக்கையைப் பெற வேண்டியதன்  பேரில் மேற்குறிப்பிடப்பட்ட  நடைமுறையில் மாற்றங்கள் நிகழலாம்.

நான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறுவது?
  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனது வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
வாழ்க்கைத்துணை

  • இலங்கை வாழ்க்கைத்துணையின் விவாக / பிறப்புச் சான்றிதழ் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் உரிய அதிகாரி ஒருவரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் பதிவின் மூலம் பிராஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டவர் எனின், பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
  • இலங்கை வாழ்க்கைத்துணையின் கடவுச்சீட்டு அல்லது தேசிய ஆள் அடையாள அட்டை
  • விவாகரத்துப் பெற்றிருப்பின் விவாகரத்துப்பெற்ற தீர்ப்பு, முன்னாள் வாழ்கைத்துணை மரணமடைந்திருப்பின் அவரது மரணச் சான்றிதழ்
  • இலங்கை வாழ்க்தைதுணையின் விருப்பம்
இலங்கையர் அல்லாத பிள்ளைகள்
பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்
விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு

எனது வதிவிட வீசாவை மீண்டும் புதுப்பித்துக்கொள்வது எவ்வாறு?
  • இலங்கை வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதத்துடன் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு காலப்பிரிவை நீடித்துக்கொள்வதற்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • இலங்கை வாழ்க்கைத்துணை  நேர்முகப் பரீட்சைக்காக பத்தரமுல்லையில்  அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு சமூகமளிப்பது அவசியமாகும்.
 

 


 

NEW....Media Notice
Extension of Russian and Ukraine tourist visa - 21-07-2022

(EnglishSinhala/Tamil)

 


 

Media Notice
16-05-2022
(English / Sinhala/ Tamil)

 


 

 

Circular -OM/2021/01
Overseas Missions



 

Media Notice - 05/10/2021 - Passport
(English / Sinhala/ Tamil )


 

Media Notice - 05/10/2021 -Visa Extension
(English / Sinhala/ Tamil )

 


 

Media Notice 2021-08-28 - Visa Fees
(English / Sinhala/ Tamil )

 


 

GUIDELINES FOR TRAVELLERS ARRIVING FROM OVERSEAS

 


NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS

 


 

 

Information with regard to applying for ETA

 


 


 

You must make an appointment.

Appointments are open now......

 


fingerprintNew... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions


 

Notice to the all Residence Visa Applicants




INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS

 

Dual Citizenship Pending List

api_wenu_api

Location