www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் வீசா சேவைகள் என் கனவு இல்லம்
எனது கனவு இல்லம் வீசா நிகழ்ச்சித்திட்டம்
இலங்கையில் குடியமர்ந்து நீண்டகாலம் கழிக்கக் கருதியுள்ள மூத்த வெளிநாட்டவர்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளது.

கனவு இல்ல வீசா என்றால் என்ன?
இலங்கையில் எனது கனவு இல்லம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வீசாவாகும்.

நான் ஏன் இலங்கையின் எனது கனவு இல்ல நிகழ்ச்சித்திட்டத்தை தெரிவு செய்ய வேண்டும்?
 • மீளப் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய இரண்டு வருடங்களுக்காக செல்லுபடியாகும் வதியும் வீசா வழங்கப்படும்.
 • வெளிநாட்டவர்கள் மீது கருணை காட்டுகின்ற இலங்கையர் மத்தியில் சுமுகமான உணர்வுடன் பாதுகாப்பாக வசிக்கலாம்.
 • மாறுகின்ற காலநிலை, பருவங்கள் மற்றும் வெப்பநிலை போன்றவற்றை அனுபவிக்கலாம்.
 • முடிவில்லா வெளியரங்கு உடல்நலம் தருகின்ற கோல்ப், டெனிஸ், விளையாட்டரங்குகளில் உடற்பயிற்சி, மரதன் ஓட்டம், நீச்சல், சர்பிங், ஸ்நோர்கலிங், கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி, பறவை அவதானிப்பு மற்றும் உலக மட்டத்திலான வன ஒதுக்குகளில் இயற்கையை இரசிப்பதற்கான வசதிகள் நிலவுகின்றன.
 • நிறைவான சுகபோக இல்லங்கள் அல்லது தொடர்மாடி வீடுகள் அயனமண்டல கரையோரத் துண்டு நிலங்களிலும் மத்திய மலை நாட்டிலும் பிரதான நகரங்களிலும் உள்ளன.
கனவு இல்ல வீசா திட்டத்தில் பிரவேசிப்பதற்கான தகைமைகள் யாவை?
 1. 1. 55 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு வெளிநாட்டவராகவும் இருத்தல்.
 2. 2. a. 15,000 அமெரிக்க டொலர்களை அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றின் நிலையான வைப்பொன்றில் வைப்புச் செய்திருத்தல், அத்துடன்,
  2. b. 1500 அமெரிக்க டொலர்களை அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை பிரதான விண்ணப்பதாரிக்காகவும் (கணவன் / மனைவி / பிள்ளைகளுடன் வருவாரெனின்) ஒவ்வொரு வாழ்க்கைத்துணை / பிள்ளைக்குமாக * 750 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை மாதந்தோறும் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றின் நடைமுறைக் கணக்கிலோ அல்லது சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்தல் வேண்டும்.
  *வயது 18 வருடங்களுக்கு குறைந்த விவாகமாகாதவராக இருத்தல் வேண்டும்.
வதியும் விருந்தினர் திட்டத்தின் கீழ் விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
 1. கடவுச்சீட்டு அளவிலான இரண்டு நிழற்படங்களுடன் வதியும் வீசா விண்ணப் பத்திரம்.
 2. விண்ணப்பப் பத்திரங்களை குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள வீசா பிரிவில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.immigration.gov.lk இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 3. வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் / பயண ஆவணத்தின் (சகல பக்கங்களும்) அத்தாட்சிப்படுத்திய பிரதிகள்.
 4. இலங்கையில் தங்கியிருக்க இயலுமென்பதை நிருபிப்பதற்கான நிதி நிலைமையைக் காட்டுகின்ற வங்கிக் கூற்றுகளின் / பிற ஏற்புடைய நிதி ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்திய பிரதிகள்.
 5. மாதாந்தம் பிரதான விண்ணப்பதாரிக்காக 1500 அமெரிக்க டொலர்களையும் ஒவ்வொரு தங்கிவாழ்பவருக்கும் 750 அமெரிக்க டொலர்கள் வீதம் அனுப்பி வைக்க இயலுமென்பதற்கான (ஓய்வூதியம் / ஓய்வுறுபருவக் கொடுப்பனவு போன்றவை) வருவாய் மூலங்கள்.
 6. வதியும் நாட்டின் பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்ட 06 மாதங்களை விஞ்சாத இசைவுச் சான்றிதழ்.
 7. வதியும் வீசா கோருகின்ற வாழ்க்கைத்துணையின் விவாகச் சான்றிதழ்.
ஏற்புடையதான நியதிகளும் நிபந்தனைகளும் யாவை?
 • இலங்கையில் அவர்கள் தங்கியிருக்கும் காலத்தை முடிவுறுத்த தீர்மானிக்கின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்திட்டத்தின் கீழ் வைப்புச் செய்துள்ள மொத்த நிலையான வைப்பினையும் மீளப் பெற்றுக்கொள்ளலாம். எனினும், அப்பணத்தை மீளப்பெற குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஊடாக செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் முன்னனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நிலையான வைப்பின் மீதான வட்டியை மீளப்பெற்று விண்ணப்பதாரியின் நலனோம்பலுக்காக செலவிடலாம்.
 • இலங்கைக்கு ஏற்புடைத்தான செல்லுபடியாகும் மருத்துவக் காப்புறுதிப் பத்திரமொன்றை வைத்திருத்தல் வேண்டும்.
 • வதியும் நாட்டின் பொலிஸாரிடமிருந்து பெற்ற இசைவுச் சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும். வதியும் வீசா புதுப்பிக்கப்படும் வேளையில் இலங்கைப் பொலிஸாரிடமிருந்தும் அத்தகைய சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 • எவ்விதமான குற்றச் செயலிலும் ஈடுபடலாகாது.
 • இலங்கையில் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடலாகாதென்பதுடன், சுதேசிகளின் உணர்வுகளைப் பாதிக்குமெனக் கருதக்கூடிய எவ்விதமான கருமத்திலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய நடவடிக்கைகளிலும் ஈடுபடலாகாது.
 • இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கொடுப்பனவுடனான அல்லது கொடுப்பனவற்ற எவ்விதமான தொழிலிலும் ஈடுபடலாகாது.
 • வதியும் விருந்தினர்களான விண்ணப்பதாரிகள் இலங்கையின் வரி தொடர்பான சட்டங்களுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் கட்டுப்படல் வேண்டுமென்பதோடு, ஏற்புடைய வரிகளை அவர்கள் செலுத்த வேண்டும்.
 • ஒவ்வொரு விண்ணப்பதாரியும் தனது நிலையான வைப்புக் கணக்கினைப் போன்றே சேமிப்பு வைப்புக் கணக்குகள் பற்றிய அரையாண்டு வங்கிக் கூற்றுக்களை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் (வீசா) கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
 • வீசா நிலைமை பற்றியும் சொந்த தகவல்கள் பற்றியும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அத்தகைய மாற்றங்ளை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் (வீசா) கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும்.
விண்ணப்பப் பத்திரங்கள் எவ்வாறு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன?
விண்ணப்பப் பத்திரங்கள் கொழும்பு இல் உள்ள குடிவரவு - குடியகல்வுச் திணைக்களத்தில் மாத்திரமே பொறுப்பேற்கப்பட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
 • விண்ணப்பப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பப் பத்திரத்தின் நிலைமை பற்றி விண்ணப்பதாரிக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும்.
 • வெற்றிகரமான விண்ணப்பதாரிக்கு (அ) வாழ்க்கைச் செலவுக்கான 1500 அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணயக் கணக்கினையும் சேமிப்புக் கணக்கினையும் ஆரம்பிப்பதற்கான தற்காலிக அனுமதி வழங்கல் கடிதமும் (ஆ) வங்கியின் தொழிற்பாட்டு முகாமையாளருக்கு வரையப்பட்ட அறிவுறுத்தல் கடிதமும் விநியோகிக்கப்படும்.
 • 15,000 அமெரிக்க டொலர்கள் நிலையான வைப்புக்கான மற்றும் மாதாந்தம் 1500 அமெரிக்க டொலர்களை அனுப்பி வைப்பதற்கான வங்கிக் கூற்றினையும் விண்ணப்பதாரி தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஒவ்வொரு தங்கிவாழ்பவருக்கும் 750 அமெரிக்க டொலர் வீதம் ஏற்புடையதாயின் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
 • வதியும் வீசா இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும். இதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரிக்கும் தங்கிவாழ்வோருக்கும் இது வழங்கப்படும்.
 • வீசா அனுமதிப் பத்திர செயல்முறைக் கட்டணம் (வீசா கட்டணங்களை அறிந்துகொள்ள இங்கே சுடக்குக.)
 • ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் தங்கிவாழ்பவருக்குமான விண்ணப்பப் பத்திர செயல்முறைக் கட்டணம் 150 அமெரிக்க டொலர்களாகும்.
 • ஒரு விண்ணப்பதாரி, வாழ்க்கைக்துணை மற்றும் 16 வயதுக்கு குறைந்த தங்கிவாழும் பிள்ளைக்கான வதியும் வீசா கட்டணமும் வட்டியும் ஆண்டொன்றுக்கு 20,000 இலங்கை ரூபா ஆகும்.
வதியும் வீசா காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கை முறை
எனது வதியும் வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
 • வெளிநாட்டுக் கடவுச்சீட்டின் / புதிய வெளிநாட்டுக் கடவுச்சீட்டின் பிரதி
 • நிலையான வைப்புச் சான்றிதழை புதுப்பித்தலுக்கான அறிவித்தலும் சேமிப்புக் கணக்குக் கூற்றும்
 • மருத்துவ காப்புறுதிப் பத்திரத்தின் புதுப்பித்தல் அறிவித்தல்
 • இலங்கையில் பெறப்பட்ட பொலிஸ் இசைவுச் சான்றிதழ்
விண்ணப்பப் பத்திரங்களுக்காகவும் அறிவுறுத்தல்களுக்காகவும் எம்முடன் தொடர்பு கொள்க

கனவு இல்ல வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெறுவது?
எனது கனவு இல்ல வீசா விண்ணப்பத்தை நான் எவ்வாறு சமர்ப்பிப்பது?
மிகவும் அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் நீங்கள் கனவு இல்ல வீசா விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கலாம்.

எனது கனவு இல்ல வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை?

வீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.

நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இலங்கைத் தூதரகமொன்று கிடையாது. நான் என்ன செய்வது?

உங்களுக்காக வீசா விண்ணப்பிக்க இலங்கையில் (நண்பர், உறவினர் அல்லது பிரயாண முகவர்) உள்ள ஒருவரை ஈடுபடுத்தலாம்.

எனது கனவு இல்ல வீசாவின் உச்சமட்ட செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
உங்கள் சுற்றுலா வீசா தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் தங்கியிருக்க செல்லுபடியாகும். காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னராக நீங்கள் புதுப்பித்தலுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

நான் எனது கனவு இல்ல வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்?
எல்லாவிதமான வீசா நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்களையும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.

கனவு இல்ல வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெறலாம்?
 • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
 • கண்டி, மாத்தறை, அநுராதபுரம் பிராந்திய அலுவலகங்களிலிருந்து
 • விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனது கனவு இல்ல வீசா தொடர்பான ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

இடைத்தங்கல் வீசா
இடைத்தங்கல் வீசா என்றால் என்ன?
இடைத்தங்கல் வீசா என்பது அச்சொற்றொடரில் கூறுவதைப் போன்ற வெளிநாட்டவரொருவர் பிறிதொரு நாட்டுக்குச் செல்கின்ற வேளையில் தற்செயலாக குறுகிய காலத்திற்காக இலங்கைக்குள்ளே வருவதற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். '
A' அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கையில் பிரவேசிக்கும் விமான நிலையத்தில் புறக்குறிப்பு இடப்படும். ஏனையோர் இடைத்தங்கல் வீசா அனுமதிப் பத்திரத்தை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

இடைத்தங்கல் வீசா பெறுவதற்கான தகைமைகள் யாவை?
இலங்கையூடாக வேறொருநாட்டுக்குச் செல்லும் எந்தவொரு வெளிநாட்டவராகவும் அமைதல் இடைத்தங்கல் வீசா பெறுவதற்கான ஒரேயொரு தகைமையாகும். பிறிதொரு நாட்டுக்கு தொடரறாமல் செல்கின்ற வேளையில் இலங்கையில் பிரவேசித்து அதே கலத்தில் அல்லது விமானத்தில் பயணிக்கும் பயணி இடைத்தங்கல் வீசா பெற வேண்டிய அவசியம் கிடையாது.
விமானக் கம்பெனியொன்று ஆளொருவரையோ ஆட்களையோ நாட்டுக்கு கொண்டுவந்து அடுத்த விமானத்தில் ஏற்றிச் செல்லுமாயினும் அவ்வாறு வந்தவர்களின் பெயர்ப் பட்டியலொன்றைச் சமர்ப்பிக்குமாயின் அத்தகைய பயணிகளுக்கு இடைத்தங்கல் வீசா அவசியமில்லை.
அத்தகைய வேளைகளில் வருகைதரல் கூடத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரம் பெற்ற அலுவலரால் அப்பயணிகளின் கடவுச்சீட்டுகள் தடுத்துவைக்கப்பட்டு வெளிச்செல்லல் கூடத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரம் பெற்ற அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவதோடு அவர் அப்பயணிகள் திரும்பிச் செல்லும் போது அவர்களிடம் கடவுச்சீட்டுகளை மீள ஒப்படைப்பார்.
இவ்வசதி பொதுவான வழமையாக வழங்கப்படுவதில்லையென்பதோடு சம்பந்தப்பட்ட விமானக் கம்பெனியால் அதற்கான விசேட கோரிக்கை விடுக்கப்பட்டு குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளரது அனுமதி பெறப்படல் வேண்டும்.

இலங்கைக்குள் பிரவேசிக்க முன்வீசா கோருகின்ற பயணிகளுக்கே இந்த நடைமுறை ஏற்புடையது. முன்வீசா அவசியமற்ற பயணிகளுக்கு அடுத்து அவர்கள் பயணஞ் செய்யும் விமானத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்.

இடைத்தங்கல் வீசா விண்ணப்பப் பத்திர மாதிரியை நான் எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
இடைத்தங்கல் வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கு சமர்ப்பிப்பது?
அருகில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் நீங்கள் சுற்றுலா விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

எனது இடைத்தங்கல் வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

இடைத்தங்கல வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணங்கள் இருவயினொத்த அடிப்படையிலேயே அறவிடப்படும். அட்டவணை 'B' இல் காட்டப்பட்டுள்ள வருகைதரல் வீசா கட்டணங்களை ஒத்ததாகவே இடைத்தங்கல் வீசா கட்டணங்களும் அமையும்.

இடைத்தங்கல் வீசாவுக்கான உச்சமட்ட செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்கான இடைத்தங்கல் வீசா வழங்கப்படும்.

இடைத்தங்கல் வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்?
அனைத்துவிதமான வீசாக்களின் கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்களை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும். நியதிச் சட்டமுறையான அதிகபட்ச காலப்பகுதியிலான ஒரு மாத காலத்தைப் பார்க்கிலும் குறைந்த காலப்பகுதிக்காக இடைத்தங்கல் வீசாவொன்று விநியோகிக்கப்பட்டிருந்தாலும், விண்ணப்பதாரி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருப்பின் அதன் கால நீடிப்பினை மறுப்பதற்கான காரணமேதும் கிடையாது.

இடைத்தங்கல் வீசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
 1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து
 2. விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இடைத்தங்கல் வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுதும் காலம் நிறைவடைய வேண்டும்.
 

Location