குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



எல்லைக் கட்டுப்பாடு

இறங்குதுறைகள் கிளை

தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய வண்ணம் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதனூடாக இந்த நாட்டுக்கு வருகைத்தரும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் வினைத்திறன்மிக்க  சேவை இந்தப் பிரிவினால் பிரதானமாக வழங்கப்படுகின்றது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கத்தில் 6 ஆம் மாடியில் A மற்றும் B பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறைகள் பிரிவினால் ஏற்புடைய வசதிகள் வழங்கப்படுகின்றன. வேறு ஆதரவு சேவைகளை வழங்குவதனூடாக புலனாய்வுப் பணிகளும்  மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட  உள்வரும் மற்றும்  வெளியேறும் இறங்கு துறைகள்

விமான நிலையங்கள்

  1. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் – கட்டுநாயக்கா
  2. மத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம்
  3. கொழும்பு சர்வதேச விமான நிலையம் – இரத்மலானை
  4. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
  5. கொக்கலை விமான நிலையம்
  6. மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம்

துறைமுகங்கள்

  1. கொழும்புத் துறைமுகம்
  2. காலித் துறைமுகம்
  3. ஹம்பாந்தோட்டை  சர்வதேச  விமான நிலையம்
  4. திருகோணமலைத் துறைமுகம்
  5. காங்கேசன்துறைத் துறைமுகம்
  6. தலைமன்னார் இறங்குதுறை
  7. நுரைச்சோலை இறங்குதுறை
  8. ஒலுவில் துறைமுகம்

பணிகள்

  1. இலங்கைக்கு வருகை தருகின்ற மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறுகின்ற பயணிகளின் தடைநீக்க (Clearance) நடவடிக்கைகளை நிறைவேற்றுதல்.
  2. இலத்திரனியல் பயண அங்கீகாரம் (ETA) இன்றி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தந்த விமான நிலையங்களில் மற்றும் துறைமுகங்களில் வைத்து இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற்றுக் கொடுத்தல்.
  3. இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்களில் நங்கூரமிடப்படுகின்ற கப்பல்களின் கப்பற் பணியாட்தொகுதியினருக்கு தங்காலிகமாக தரைக்கு வருவதற்கு அனுமதிப் பத்திரங்களை விநியோகித்தல்.
  4. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுக் கப்பற் பணியாட்தொகுதியினருக்கு பிணைமுறி (ஸ்ரிக்கர்களை) விநியோகித்தல்
  5. வெளிநாட்டுத் தூதரகங்கள் இலங்கையில் அமையப் பெற்றில்லாத நாடுகளுக்குச் செல்லத் தேவைப்படுவோருக்கு அந்த நாடுகளுக்கு பிரவேசிப்பதற்குத் தேவையான வீசாக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள நாடொன்றிற்கு கடவுச்சீட்டை விரைவான பொதிச் சேவை (Courier)   மூலம் அனுப்புவதற்கு அங்கீகாரம் வழங்குதல்.
  6. வெளிநாடு சென்றுள்ள பயணிகளின் குடிவரவு, குடியகல்வு தொடர்பான தகவல்கள்/ விபரங்கள் அடங்கிய கடிதங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு அந்த நிறுவனங்களின்  கோரிக்கைக்கேற்ப வழங்குதல்.
  7. இந்த நாட்டிலிருந்து வெளியேறுவதை மற்றும் நாட்டிற்குள் வருவதை தடை செய்து நீதிமன்றங்களினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்தலும் பயணிகள் நாட்டிலிருந்து வெளியேறுதல் மற்றும் நாட்டிற்குள் வருகை தருதல் தொடர்பான விபரங்களை / தகவல்களை உசாவி அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தொடர்பான கடமைகள்.
  8. முன்னாள் இலங்கைப் பிரஜைகளின் பூதவுடல் மற்றும் உடற் பாகங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால்  கோரிக்கை விடுக்கும் போது அதற்கான அனுமதியை வழங்குதல்.
  9. இலங்கையிலிருந்து வெளியேறும் போதும் இலங்கைக்கு வருகை தரும் போதும் துறைமுகங்களில் மற்றும் விமான நிலையங்களில் பயணிகளினால் பூரணப்படுத்த வேண்டிய குடிவரவு, குடியகல்வு பத்திரங்களை விநியோகித்தல்.
  10. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களினால் நிறைவேற்றப்படுகின்ற சேவைகளை வழிநடாத்தல், மேற்பார்வை செய்தல் மீளாய்வு செய்தல் மற்றும் இற்றைப்படுத்தல்.
  11. தொழில் முன்னேற்றத்திற்கு வசதியளிப்பதற்காக இலங்கை தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆலயங்களின் உதவியுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.

பிரதான அலுவலகத்தின்  இறங்குதுறைப் பிரவினால் வழங்கப்படும்  சேவைகள்

  1. கடவுச்சீட்டுக்களை இலங்கைக்கு வெளியே அனுப்புவதற்கும் இலங்கைக்கு அனுப்புவதற்கும் அனுமதி வழங்குதல்.
    1. கூரியர் தூதரக சேவை மூலம்
    2. மூன்றாம் தரப்பினர் மூலம்

      தேவையான ஆவணங்கள்
      1. கடவுச்சீட்டு மற்றும் சுயவிபரத் தகவல்கள் அடங்கிய பக்கத்தின் பிரதி
      2. கடவுச்சீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட  கோரிக்கை கடிதம்
      3. தூதரக சேவை மூலம் விருப்பம் தெரிவித்து வழங்கிய கடிதம் மற்றும் அதன் பிரதி
      4. கடவுச்சீட்டை வெளியே அனுப்புவதற்குரிய காரணங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
      5. 16 வயதுக்கு குறைந்த பிள்ளையின் கடவுச்சீட்டை அனுப்பும் போது பெற்றோரில் ஒருவரது சம்மதக் கடிதம் மற்றும் பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதியொன்றுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
      6. மூன்றாந் தரப்பொன்றினூடாக இலங்கைக் கடவுச்சீட்டுகளை இலங்கைக்கு வெளியே அனுப்பும் போது தேவையான ஆவணங்கள்
        • அவர் சார்பில் கடவுச்சீட்டை கொண்டு செல்வதற்கு மூன்றாம் தரப்பினரை பெயர் குறிப்பிட்டு கடவுச்சீட்டு உரிமையாளரால் வழங்கப்படும் கோரிக்கை கடிதம்.
        • கடவுச்சீட்டு உரிமையாளர் சார்பில் கடவுச்சீட்டை கையில் எடுத்துச் செல்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் மூன்றாம் தரப்பால் செய்யப்படும் கோரிக்கை கடிதம்.
      7. வெளிநாட்டு தூதரக கிளையினால் வழங்கப்படும் கடவுச்சீட்டு ஒன்றினை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதற்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
        • புதிய கடவுச்சீட்டு மற்றும் அதன் சுயவிபரத் தரவுகள் அடங்கிய பக்கம்
        • கடவுச்சீட்டு உரிமையாளரின்  கோரிக்கை கடிதத்திற்கு அமைய வெளிநாட்டு தூதரகத்தினால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுப் பிரதி
        • அதிகாரம் வழங்கப்பட்ட ஆளின்  தேசிய அடையாள அட்டையின் பிரதி
        • அவ்வாறு  மேற்கொள்ளும் பொருட்டு பெற்றுக்கொண்டதாக கூரியர்  சேவையின் கடிதம் மற்றும் அதன் பிரதி
        • மூன்றாந் தரப்பினூடாக அனுப்பும் போது கடவுச்சீட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக சம்மதம் தெரிவித்து மூன்றாந் தரப்பிடமிருந்து பெற்றுக்  கொள்ளப்பட்ட கடிதம்.

          குறிப்பு – மேற்படி பணிக்காக ஒரு கடவுச்சீட்டுக்கு ரூ. 2,000.00 கட்டணம் அறவிடப்படும்.  கடமை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 வரை கட்டணம் செலுத்த முடியும்.
           
  2. வெளிநாட்டு கப்பற் பணியாட் தொகுதியினருக்கு பிணைமுறி ஸ்ரிக்கர்களை விநியோகித்தல்

    கப்பற் பணியாட் தொகுதியைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் அனைவரும் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன் பிணையமொன்றில் கைச்சாத்திடுதல் வேண்டும். இலங்கைக்குள் நுழையும் கப்பல்களில் பணியாற்றும்  வெளிநாட்டவர்கள் மற்றும்  கப்பல்களில் சவையை நிறைவுசெய்து இலங்கையிலிருந்து  வெளியேறுபவர்களுக்கு இந்தப் பிணைமுறி வழங்கப்படும். நாட்டுக்குள  நுழைபவரின் இந்த நாட்டு முகவரினால் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு பிணைமுறிக் கட்டணம் செலுத்தப்படல் வேண்டும்.  அதன் பின்னர் பட்டைக் குறியீட்டு இலக்கத்துடன் கூடிய ஸ்ரிக்கரொன்று முகவர்களுக்கு வழங்கப்படும்.

    குறிப்பு – மேற்படி பணிக்காக ஒரு பிணைமுறி ஸ்ரிகருக்கு அ. டொ. 25 கட்டணம் அறவிடப்படும்.  கடமை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 வரை கட்டணம் செலுத்த முடியும்.
     
  3. அரசாங்க நிறுவனங்களின் கோரிக்கையின் பேரில் ஆட்களின் பயண விபரங்களை வழங்குதல்.
     
  4. இரட்டைக் குடியுரிமையாளர்களின்  மற்றும் முன்னாள் இலங்கை குடியுரிமையைக் கொண்டிருந்த ஆட்களின் கடவுச்சீட்டுக்களில் இலங்கை கடவுச்சீட்டின் மூலம் வருகைத்தரும்  போது மேலொப்பத்தை மாற்றுதல்.
     
  5. தடுத்துவைக்கப்பட்ட கடவுச்சீட்டு ஆவணங்களை இலங்கையின் ஏற்புடைய தூதரகங்களுக்கு ஒப்படைத்தல்.
     
  6. பல்வேறு தரப்பினருக்கு கடிதங்களை தயாரித்தல்.
     
  7. இலங்கையிலோ அல்லது  வெளிநாட்டிலோ காணாமல் போனோரின் பயணத் தகவல்களை அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குதல்.
     
  8. முன்னாள் இலங்கைப் பிரஜைகளின் பூதவுடல் மற்றும் உடற் பாகங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால்  கோரிக்கை விடுக்கும் போது அதற்கான அனுமதியை வழங்குதல்.


அழைப்பு தொடர்பான தகவல்கள்
முகவரி:    இறங்குதுறைகள் பிரிவு,
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்,
6 ஆம் மாடி, “சுஹுறுபாயா” பத்தரமுல்லை.
தொலைபேசி இல.: +94 11 2 101581
மின்னஞ்சல்: dcports@immigration.gov.lk
                             aoports@immigration.gov.lk
                             hoports@immigration.gov.lk

உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொள்ளல்

உதவிக் கட்டுப்பாட்டாளர் - க.மே திரு. எஸ்.ஏ.ஜே. பிரசன்ன குமார
  +94 11 2 101560
உதவிக் கட்டுப்பாட்டாளர் திரு. எம்.ரீ.  செய்னுல்  ரிழா
  +94 11 2 798365
உதவிக் கட்டுப்பாட்டாளர் (பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்) திரு. எம்.டபிள்யு.ஜே.டி. ஜயமான்ன
  0112263974
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் 
                                                                                   உள்வரும் முனையம்
0112253092
                                                                                   வெளியேறும் முனையம் 0112252373
அதிகாரம்பெற்ற உத்தியோகத்தர் (இறங்குதுறைகள் பிரிவு) பிரதான அலுவலகம் 0112101581
கொழும்பு சர்வதேச விமான நிலையம் – இரத்மலானை 0115219717
மத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் 0472031906
கொழும்புத் துறைமுகம் 0112483266
காலி துறைமுகம் 0912227111
திருகோணமலை துறைமுகம் 0265678280
ஹம்பாந்தோட்டை  சர்வதேச  விமான நிலையம் 0475480020

 




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
27503148