பொதுமக்களுக்கு மிகவும் இலகுவாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில்இணையவழியில் (Online) விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறையொன்று 2023.06.15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த இணைய வழிமுறையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு தங்களது கைவிரல் அடையாளங்களை நாடு முழுவதிலும் 51 பிரதேச செயலகங்களிலுள்ள ஆட்பதிவுத் திணைக்கள உப அலுவலகங்களில் வழங்க முடியும்.
இதன் அங்குரார்ப்பண வைபவம் 2023.06.15 ஆம் திகதி பி.ப. 3.00 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களின் பங்கேற்புடன் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைப்பெறும்.
விலைமனு கோரல்...
12 08 2024 - 12:00 PM
அறிவித்தல்...
04 07 2024 - 15:40 PM
போட்டிப் பரீட்சை...
10 06 2024 - 11:30 AM
தயவான அறிவித்தல்...
07 06 2024 - 14:50 PM