குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



பொதுவான தகவல்கள்

முக்கிய அறிவித்தல்

2012  ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபார சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்காக இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெற்றுக் கொள்ளல் வேண்டும். மேலதிக விபரங்களுக்கு https://www.srilankaevisa.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

மூன்றாந் தரப்பொன்றினூடாக இலத்திரனியல் பயண அங்கீகாரத்திற்காக (ETA) விண்ணப்பிக்கும் போது, எமது இணையத் தளமான https://www.srilankaevisa.lk எனும் இணையத்தளத்தினூடாக கட்டணக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், இலத்திரனியல் பயண அங்கீகார விண்ணப்பம் (ETA Application) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதென்பதை அத்தாட்சிப்படுத்திக் கொள்ளலும் வேண்டும்.  வேறு இணையத்தளங்களூடாக அல்லது முகவர் நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு கொடுப்பனவும் செல்லுபடியாகாது. எனவே, இலங்கைக்கு இறங்குதுறை ஒன்றினூடாக உட்பிரவேசிக்கும் போது மீண்டும் கொடுப்பனவு வெலுத்துவதிலிருந்து தவிர்ப்பதற்காக இலத்திரனியல் பயண அங்கீகாரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து கொடுப்பனவு செலுத்துவதில் கவனம் செலுத்தவும்.

வீசா பிரிவின் கடமை நேரங்கள் யாவை?

  • சகல விண்ணப்பங்களையும்ஏற்றுக்கொள்ளல் நேரம்: மு.ப. 8.30 மணி தொடக்கம் பி.ப. 1.30 மணி வரை.
  • ஒப்படைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தர வேண்டிய நேரம்: மு.ப. 8.30 மணி தொடக்கம் பி.ப. 12.00 மணி வரை.

    சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் அரசாங்க விடுமுறை நாட்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.

இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்றால் என்ன?

இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்பது  இலங்கையர் அல்லாதோருக்கு இலங்கை நாட்டிற்குள் பிரவேசிக்க சட்டரீதியில் வசதியளிப்பதற்கும்  அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியை மட்டுப்படுத்துவதற்கும்  அவ்வாறு அவர்கள் நாட்டில் தங்கியிருப்பதற்கான நிபந்தனைகளை அறிவிப்பதற்கும்  கடவுச்சீட்டிலோ அல்லது அதனை ஒத்த ஆவணமொன்றிலோ இடப்படுகின்ற புறக்குறிப்பாகும்.

இலங்கை வீசா அனுமதிப் பத்திர வகைகள் யாவை?

இலங்கை நாட்டிற்குள் பிரவேசிக்க மற்றும் / அல்லது நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படுகின்ற வீசா வகைகள் மூன்று (03) காணப்படுகின்றன.

வருகைதரு வீசா அனுமதிப் பத்திரம் (Visit Visa)

வருகைதரு வீசா அனுமதிப் பத்திரம் என்பது  வெளிநாட்டவர் ஒருவருக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிக்கின்ற அனுமதிப் பத்திரம் ஆகும். இந்த வீசா அனுமதிப் பத்திரத்தில் நாட்டில் தங்கியிருக்கக்கூடிய காலப் பகுதியும்  நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

வருகைதரு வீசாவை 02  உப பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்:

  1. சுற்றுலா வீசா

    கண்கவர் இடங்களைப் பார்வையிடல், உல்லாசப் பயணங்கள், ஓய்வு நேரத்தைச் சுகமாகக் கழித்தல், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது யோகா பயிற்சி முதலான நோக்கங்களுக்காக குறுகியதொரு காலப்பகுதி இலங்கையில் தங்கியிருக்க கருதுகின்ற தூய எண்ணம் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வருகைதரு வீசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும்.

  2. வியாபாரநோக்கத்திலான வீசா

    வர்த்தக வியாபார நோக்கங்களுக்காக குறுகியதொரு காலப்பகுதிக்கு இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கு வியாபார வீசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படுகின்றது. இந்த வீசாக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்காக விநியோகிக்கப்படுகின்றது.


வதிவிட வீசா அனுமதிப் பத்திரம்

வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் என்பது  விசேட நோக்கங்களுக்காக இலங்கையில் வசிப்பதற்காக விநியோகிக்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். வதிவிட வீசாவை 13  உப பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

எனக்கு எத்தகைய வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்திற்கு தகுதி உண்டு?

  1. வேலைவாய்ப்பு வகை

    • அரசாங்கத்தினால்  அனுமதிக்கப்படுகின்ற கருத்திட்டங்களில் சேவை அவசியத்தின் பேரிலான ஆளணியினர்
    • இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் அமுல் செய்யப்படுகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களும் அவர்களின் தங்கி வாழ்வோரும்.
    • வங்கிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும்  அவர்களின் தங்கி வாழ்வோரும்.
    • தனியார் கம்பனிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும்அவர்களில் தங்கி வாழ்வோரும்.
       
  2. முதலீட்டு வகை
    • இலங்கையின் நிதி மூலதன முதலீட்டை செய்ய விருப்பம் உள்ளவர்கள்
    • இலங்கையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆட்கள்
     
  3. சமயம்சார் வகை
    • மதகுருமார்.
    • சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆளணியினர்
       
  4. மாணவர் வகை
    • பல்கலைக்கழக மாணவர்கள்.
    • அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள்.
    • தன்னார்வ ஊழியர்கள்
       
  5. அரச சார்பற்ற அமைப்புக்களின் அல்லது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் இணைப்புச் செய்ப்பட்டுள்ள ஆளணியினர் மற்றும் அவர்களின் தங்கி வாழ்வோர்.

  6. 1954 இந்திய – இலங்கை உடன்படிக்கையினால் உள்வாங்கப்பட்டு பதிவு செய்து கொண்டுள்ள இந்தியர்கள்.

  7. முன்னாள் இலங்கையரொருவர் மற்றும் அவரது தங்கி வாழ்வோர்

  8. இலங்கையரொருவரின் குடும்ப அங்கத்தவர்கள்

    • வாழ்க்கைத் துணை.
    • வெளிநாட்டுதேசியத்தைக்கொண்ட பிள்ளைகள்.
  9. இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வீசா அனுமதிப் பத்திரங்கள்

    • இலங்கையில் தூதுவராலயங்களில் பணியாற்றும் இராதந்திரிகள் மற்றும் ஆளணியினர்
    • அவர்களது வாழ்க்கைத்துணைகள் மற்றும் தங்கிவாழ்வோர்.
  10. எனது கனவு இல்லம் வீசா (My Dream Home) நிகழ்ச்சித் திட்டம்.

  11. வதிவிட அதிதி வீசாத் திட்டம் (Residence Guest Scheme).

  12. மருத்துவ வீசா

    • மருத்துவ  சிகிச்சைப் பெற்றுக்கொள்பவர்கள்
    • மருத்துவ சிகிச்சைப் பெற்றுக்கொள்பவர்களின் உதவியாளர்கள் மற்றும் தங்கி வாழ்வோர்
       
  13. நீதிமன்ற வீசா
    • நீதிமன்றமொன்றில் தோற்ற வேண்டிய நீதிமன்றத்தில் வழக்கு உள்ள ஒருவர்


இடைத்தங்கல் வீசா

இடைத்தங்கல் வீசா என்பது, வெளிநாட்டவரொருவர் பிறிதொரு பயண முடிவிடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்காலிகமாக மிகக் குறுதிய காலப்பகுதிக்கு தரித்திருப்பதற்காக இலங்கை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படுகின்ற வீசாவாகும்.

வீசா கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவோர் யாவர்?

  • இலங்கை இரட்டைக் குடியுரிமையை உடையவர்கள்.
  • 1948 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் 5(2) ஆம் பிரிவின் கீழ் பிறப்பைப் பதிவு செய்துள்ள 21 வயது வரையான பிள்ளைகள்.
  • இலங்கைப் பெற்றோர்களுக்கு இலங்கையில் பிறந்து வெளிநாட்டுக் குடியுரிமையைக் கொண்டுள்ள 21 வயதுக்கு குறைந்த பிள்ளைகள்.

கட்டணம் இன்றி வீசாவைப் பெற்றுக்கொள்ள தகுதி உள்ளவர்கள் யார்?

செல்லுபடியான இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ புறக்குறிப்பினைக் கொண்ட கடவுச்சீட்டினைக் கொண்டுள்ளவர்கள் வீசா அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.  இதன் பொருட்டு ஏற்புடைய நிரல் அமைச்சின் பரிந்துரை அவசியமாகும்.

இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் அவர்களது குறுகியகால இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ பயணத்தின் போது  வீசா கட்டணத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டுமென இருதரப்பு உடன்படிக்கைளில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள நாடுகள் யாவை?

நாடுகளின் பட்டியலையும் அனுமதி வழங்கப்பட்டுள்ள காலப் பிரிவையும் தயவுசெய்து இங்குள்ள இணைப்பினூடாக பார்வையிடவும்.

இலங்கை வீசா அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பூர்த்தி செய்திருக்க வேண்டிய பொதுவான தேவைகள் யாவை?

  1. நீங்கள் இலங்கை நாட்டிற்குள் பிரவேசிக்க பொருத்தமானவரென இலங்கை குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்கள் திருப்தியடைதல்.
  2. நீங்கள் இலங்கை நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நோக்கத்தை இலங்கை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அங்கீகரித்தல்.
  3. நீங்கள் இலங்கைக்கு வருகை தந்த தினத்தில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றினை வைத்திருத்தல்.
  4. நீங்கள் இலங்கையில் கழிக்கும்/ செலவிடும் காலப் பகுதியில் உங்களது பராமரிப்புக்காகவும், உங்களது வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை விநியோகித்த நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் போதிய பணம்/ நிதி உங்களிடம் இருப்பதாக இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் திருப்தியடைதல்.
  5. நீங்கள் சுற்றுலா வீசா அனுமதிப் பத்திரதாரர் எனின்  நீங்கள் வசிக்கும் நாட்டுக்கோ அல்லது நீங்கள் பயணிக்கக் கருதுகின்ற அடுத்த பயண முடிவிட நாட்டுக்கான எழுத்து மூல அனுமதியொன்று (விமானப் பயணச் சீட்டு) உங்களிடம் இருக்கும் பட்சத்தில்.

இலங்கை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் தங்களுக்கு வீசா அனுமதிப்பத்திரமொன்று வழங்கப்படும்.

வருகைதரு வீசா அனுமதிப் பத்திரமொன்றின் பொதுவான நிபந்தனைகள் யாவை?

  • நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கம் தவிர கொடுப்பனவுடன் அல்லது கொடுப்பனவு இன்றி எந்தவொரு தொழிலிலோ, தொழிற்றுறையிலோ அல்லது வியாபாரத்திலோ தொழில் முயற்சியிலோ ஈடுபடலாகாது.
  • வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள காலப்பகுதி முடிவதற்கு முன்பதாக தாங்கள் உங்களது வீசா அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தல் வேண்டும்.
  • உங்களது வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் மாத்திரம் உங்களுக்கு இலங்கைக்கு வருகை தர உங்களது வீசா அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும்.
  • 30 நாட்களுக்குள் சுற்றுலா வீசாவுக்கு இரண்டு நுழைவுகளும் வியாபார வீசாவுக்கு பலதடவை நுழைவும் உரித்தாகும். (நீங்கள் வீசாவை நீடிப்பதற்கு விண்ணப்பிக்கும் போது  இந்த வசதி முடிவடையும்)
  • எல்லா வகையான வீசா அனுமதிப் பத்திரங்களினதும் செல்லுபடிக் காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கைகள் அனைத்தும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் அல்லது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இணைய வழிமூலம் சமர்ப்பித்தல் வேண்டும். நீடிப்பு ஒரு வழி நுழைவுக்குரியதாகும். நீங்கள் நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அது செல்லுபடியற்றதாகும்.
  • தற்போது இணைய வழியில் வியாபார வீசாவை நீடிக்க முடியாது.

வதிவிட வீசாவின் பொதுவான நிபந்தனைகள் யாவை?

  • தங்களது வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் தவிர வேறு எந்தவித செயற்பாட்டிலும் தாங்கள் ஈடுபடுதல் கூடாது.
  • அது பலமுறை நுழைவு வீசா அனுமதிப்பத்திரமாகும்.

இடைத்தங்கல் வீசாவொன்றின் பொதுவான நிபந்தனைகள் யாவை?

தாங்கள் விமானப் பயணத்திற்கு 24 மணித்தியாலங்களுக்கு மேல் தங்கியிருக்குமிடத்து https://www.srilankaevisa.lk. ஊடாக இடைத்தங்கல் வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். அது 48 மணித்தியாலங்கள் மாத்திரம் செல்லுபடியாகும்.




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
23314141