குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்




ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண்

21 07 2023 - 13:50 PM

ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் பிரகாரம்2023ஆம் ஆண்டில் இலங்கை கடவுச்சீட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைஅடைந்துள்ளது. முன்னைய ஆண்டை விட 8 இடங்கள் முன்னேறி மிக அண்மைய தரவரிசையில் 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் என்பது உலகின் அனைத்து கடவுச்சீட்டுக்களின்உண்மையான மற்றும்உத்தியோகப்பூர்வமான தரவரிசையாகும். இது கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் முன்வீசா இன்றிபயணிக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றது.  சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புடன் (IATA) இணைந்துஉலகளாவிய குடியிருப்பு மற்றும் குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லி மற்றும் பங்காளர் நிறுவனத்தினால் இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றது.

இந்தச் சுட்டெண்ணின் அண்மைய இற்றைப்படுத்தலின் பிரகாரம் இலங்கையின் தரவரிசை குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுபட்டியலில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டு தற்போது அதன் பிரஜைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நாடுகளுக்கு இலவச வீசாவில் அல்லது வந்திறங்கிய பின்னர் வழங்கப்படும் வீசாவில் உலகளாவிய ரீதியில் பயணிப்பதற்கு  அனுமதிக்கின்றது. தரவரிசையில் அடையப்பெற்றுள்ள இந்த முன்னேற்றம், சர்வதேச உறவுகள் மற்றும் வீசா ஒப்பந்தங்களில் சாதகமான முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது.அதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு பயணத்தை மிகவும் வசதியாகமேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுஉலகளாவிய தரநிலையை மேம்படுத்துவதற்கும்ஏனைய நாடுகளுடன் வலுவான இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதற்கும்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளைபிரதிபலிக்கின்றன.





எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
28125377