பிராந்தியத்தின் மிகச் சிறந்த குடிவரவு மற்றும் குடியகல்வுச் சேவையாக திகழ்தல்.
தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்கைப் பேணிய வண்ணம் பொருளாதார அபிவிருத்திக்கான வசதியை ஏற்படுத்தி நாட்டிலிருந்து வெளிச்செல்வோரையும் நாட்டுக்குள் வருவோரையும் கண்காணித்தல் மற்றும் பிரசாவுரிமை சேவைகளை வழங்குதல்.
1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பின்வரும் ஏற்பாடுகளைச் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
1949.11.01 ஆம் திகதியில் இருந்து குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் ஏற்பாடுகளை அமுலாக்க குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் நிறுவப்பட்டுள்ளது.
சட்டத்தின் 4 வது பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டாளருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் மூலமாக அல்லது சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள, விதிக்கப்பட்டுள்ள அல்லது கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள், கடமைகள், செயற்பாடுகளை அமுலாக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் 2 வது பிரிவு அல்லது 31 வது பிரிவு அல்லது 52 வது பிரிவு மூலமாக அளிக்கப்பட்டுள்ள தத்துவங்கள் அமைச்சராலேயே அமுலாக்கப்படல் வேண்டும். (சட்டத்தின் 4, 5, 6 மற்றும் 7 வது பிரிவுகளைப் பார்க்கவும் / நிருவாக ரீதியான ஏற்பாடுகளுக்கு குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் II வது பகுதியைப் பார்க்கவும்.)
இலங்கயைரல்லாத ஆட்கள் இலங்கையினுள் பிரவேசிப்பது சட்டத்தின் III பகுதியின் எற்பாடுகள் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பிரவேசிக்கும் இறங்கு துறைகள், உட்பிரவேசித்தலின் போது அவசியமான ஆவணங்கள், இலங்கைக்குள்ளே பிரவேசிக்கவும் தங்கியிருக்கவும் அவசியமான வீசா, வருகையின் போது அவசியமான மருத்துவ மற்றும் ஏனைய பரிசோதனைகள், ஆட்கள் மற்றும் அவர்களின் பொருட்கள் போன்றவற்றை பரிசோதித்தல், இலங்கையில் தடுத்துவைக்கப்படுகின்ற மற்றும் இலங்கையிலிருந்து அகற்றப்படுகின்ற சில ஆட்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய ஏற்பாடுகள்இப்பகுதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் IV வது பகுதி மூலமாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக இலங்கையரல்லாத ஆட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் புரிகின்ற செயற்பாடுகள் பரிசோதிக்கப்படும்.
இலங்கையரல்லாத ஆட்களை அவசியமேற்படுமிடத்து இலங்கையிலிருந்து வெளியேற்றுதல் அல்லது நாடுகடத்துதல் சட்டத்தின் V மற்றும் VI வது பகுதியில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக நிறைவேற்றப்படுகின்றது.
சட்டத்தின் VII ஆம் பகுதி மூலமாக ஆட்கள் இலங்கையிலிருந்து வெளியேறுதல் கட்டுப்படுத்தப்படுகின்றது. வெளியேறுவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள இறங்குதுறைகள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் அவசியப்பாடு, அதனோடு தொடர்புடைய ஒழுங்குவிதிகளைத் தயாரித்தலுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் இப்பகுதியில் அடங்குகின்றன. இப்பகுதியின் ஏற்பாடுகள் இலங்கைப் பிரசைகளுக்குப் போன்றே வெளிநாட்டவர்களுக்கும் ஏற்புடையதாகும்.
செயற்பாடுகள்