இலங்கைப் பிரசாவுரிமையைக் கொண்டுள்ள ஒருவர் வெளிநாடொன்றில் இருக்கும் போது புதிய கடவுச்சீட்டொன்றினைப் பெறவோ / கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக்கொள்ளவோ அந்நாட்டின் தூதரகத்தினூடாக அல்லது உரிய நாட்டில் இலங்கைத் தூதரகமொன்று இல்லாபோது அண்மையிலுள்ள நாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக விண்ணப்பிக்க முடியும். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத் தலைமை அலுவலகத்திலுள்ள வெளிநாட்டுத் தூதரக கிளையினால் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.
வெளிநாட்டுத் தூதரக கிளையினூடாக விண்ணப்பிக்கங்களை சமர்ப்பிக்கும் முறை:
அவசியமான ஆவணங்கள்: தரவிறக்கங்கள் - விண்ணப்பப் பத்திரம் பார்க்கவும்.
தொடர்புடைய சுற்றறிக்கை : OM/2021/01
2018.01.01 ஆம் திகதி தொடக்கம் புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள் விமான நிலையங்களூடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் செய்யப்படவில்லை.
தொடர்புடைய சுற்றறிக்கை : DIE/OM/CIR/2017/01
விசாரணைகள்
பிரதிக் கட்டுப்பாட்டாளர் - திருமதி. டபிள்யு.கே.என். நயோமி
தொலைபேசி : +94 11 2 101522
தொலை நகல் : +94 11 2879213
உதவிக் கட்டுப்பாட்டாளர் - திருமதி. கே.பீ.ஜே. பெரேரா
தொலைபேசி : +94 11 2 101523
மின்னஞ்சல் : acom@immigration.gov.lk
விண்ணப்பப்படிவங்களுக்கான கட்டணங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பின்வரும் சுற்றறிக்கைகளைப் பார்க்கவும்,
உதவிச் சேவைகள்
அத்தாட்சிப்படுத்தல் சேவைகள்
கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியொன்றை அத்தாட்சிப்படுத்திக் கொள்வது எப்படி?
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன.
இச்சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான ஆவணங்கள் யாவை ?
மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான பிரதிகளும்
இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை ?
பிரதி ஒன்றுக்கு இலங்கை ரூபா 300/-
மொழிபெயர்ப்புச் சேவை
கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அரபு மொழிபெயர்ப்பு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையூடாக வழங்கப்படும்.
எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது ?
விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகைதரல் வேண்டும்.
இச்சேவைக்கான கட்டணம் யாது ?
ஒரு கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புக்காக இலங்கை ரூபா 1,200/- அறவிடப்படும்.