சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருவோருக்கான பொதுவான அறிவுறுத்தல்கள்
திணைக்கள கட்டிட வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு முன்பதாக, எல்லோரும் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ள இடங்களிலிருந்து தமது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதுடன், முகக் கவசங்களை அணிந்திருத்தலும் வேண்டும்.
அலுவலக வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு முன்பதாக எல்லோருடைய உடல் உஷ்ணம் பரீட்சிக்கப்படும் என்பதுடன், இதற்கு எல்லோரும் ஒத்துழைத்தல் வேண்டும். இதன் போது உடல் உஷ்ணம் 98.4 பரண்ஹைட்டை (98.4°F) அல்லது 37 செல்சியசை (37°C) தாண்டியிருக்கும் பட்சத்தில் அலுவலக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
இருமல், காய்ச்சல், தடிமல், தொண்டை நோவு, உடல் வலி அல்லது சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் முதலான Covid 19 வைரஸ் நோய் அறிகுறிகளுள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் காணப்படும் ஆட்கள், Covid 19 வைரஸ் நோயாளி ஒருவருடன் இறுதி 14 நாட்களுக்குள் நெருங்கிப் பழகிய ஆட்கள் மற்றும் Covid 19 வைரஸ் நோய் அறிகுறிகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்கள் எவரும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருகை தரக் கூடாது.
ஒரு நாளில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சேவை பெறுனர்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படுவதால், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஆட்களுக்கிடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை கடைப்பிடித்த வண்ணம் தமக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன விடயங்களுக்கு மேலதிகமாக, சுகாதாரத் துறை, பாதுகாப்புப் பிரிவு, அலுவலத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள மேற்பார்வை உத்தியோகத்தர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமையவும், அலுவலக வளாகத்தினுள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமையவும் செயற்படுதல் வேண்டும்.